அற்புத அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம்
ADDED :124 days ago
நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அடுத்த பல்லவராயநத்தம் அற்புத அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்வசம் நடந்தது. நடுவீரப்பட்டு–பாலுார் சாலையில் பல்லவராயநத்தம் கிராமத்தில் அற்புத அங்காளம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று செவ்வாய்கிழமை இரவு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சண்டி ஹோமம் நடந்தது. இரவு 9:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஆலய உலாவாக வந்து ஊஞ்சல் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.விழாவில் பெரும்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.