உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி; தஞ்சாவூர் பெரியகோவிலில் மஞ்சள் அலங்காரத்தில் வராஹி அம்மன்

ஆஷாட நவராத்திரி; தஞ்சாவூர் பெரியகோவிலில் மஞ்சள் அலங்காரத்தில் வராஹி அம்மன்

தஞ்சாவூர்; பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி, மஞ்சள் அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சி அளித்தார். 


தஞ்சாவூர், பெரிய கோவிலின், தெற்கு புறத்தில் வராஹி அம்மன் சன்னதி உள்ளது.  வராஹி அம்மனை போர்களுக்கு செல்லும் போது மாமன்னன் ராஜராஜசோழன் வணங்கிச் சென்றதாக வரலாறு உண்டு. வராஹிக்கு, ஆஷாட நவராத்திரி விழா ஒவ்வொரு ஆண்டும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.அதன்படி இந்தாண்டு நேற்று துவங்கியது.  இன்று (26-ம் தேதி) மஞ்சள் அலங்காரத்தில் வராஹி அம்மன் காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 27-ம் தேதி குங்குமம், 28-ம் தேதி சந்தனம், 29-ம் தேதி தேங்காய்ப்பூ, 30-ம் தேதி மாதுளை, ஜூலை 1-ம் தேதி நவதானியம், 2-ம் தேதி வெண்ணெய், 3-ம் தேதி கனி வகை, 4-ம் தேதி காய்கறி, 5-ம் தேதி புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது.  தினமும் காலை 8:00 முதல் 10:00 மணி வரை சிறப்பு வராஹி ஹோமும், 10:00 முதல் 11:00 மணி வரை சிறப்பு அபிஷேக, தீபாராதனையும், மாலை 6 மணி முதல் சிறப்பு அலங்காரமும், இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது. பஞ்சமி தினமான 30-ம் தேதி காலை பஞ்சமி அபிஷேகம், மதியம் 12:00 மணிக்கு பஞ்சமி குழுவினரால் ஆயிரம் பேருக்கு அன்னதானம் நடக்கிறது. 5-ம் தேதி தேதி மாலை 6 மணிக்கு வராஹி அம்மன் வீதியுலா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !