பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் வியாழன் சிறப்பு பூஜை
ADDED :260 days ago
திருப்புத்தூர்; திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில் இன்று வியாழன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குரு ஸ்தலமான இங்கு அஷ்டமா சித்தி தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள ஆலமரத்தையும் சேர்த்து 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி நன்மை ஏற்படும் என்பது நம்பிக்கை. இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே. இங்கு இன்று வியாழக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சந்தனக்காப்பு வெள்ளிக்கவச அலங்காரத்தில் மூலவர் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.