மேல்மலையனூர் கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம்
ADDED :260 days ago
செஞ்சி; மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலஷ்மி கோவிலில் ஆதி பிரம்மனுக்கு தாலாட்டு உற்சவம் நடந்தது. மேல்மலையனூர் லட்சுமி நாராயண அஷ்டலட்சுமி மற்றும் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஆதி பிரம்மனுக்கு அமாவாசையை முன்னிட்டு தாலாட்டு உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு ஆஞ்சநேயர் மற்றும் ஆதி பிரம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை நடந்தது. இரவு 9 மணிக்கு ஆதிபிரம்மனுக்கு தாலாட்டு உற்சவமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.