உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

கூடப்பாக்கம் திரவுபதி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்

வில்லியனுார்; கூடப்பாக்கம் கிராமத்தில் புதியதாக கட்டிய தர்மராசா உடனுறை திரவுபதி அம்மன் ஆலய‌ மகா கும்பாபிஷேகம் நடந்தது.

 கூடப்பாக்கம் மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் புதியதாக அமைத்துள்ள தர்மராசா உடனுறை திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 30ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. 1ம் தேதி காலை 7:00 மணியளவில் புண்யாகவாசனம், நித்ய ேஹாமம், பூர்ணாஹூதி நடந்தது. இன்று காலை விஸ்வரூபம், யாத்ரா தானம், கடம் புறப்பாடு நடந்தது. காலை 10:05 மணியளவில் ராஜகோபுரம் மற்றும் கோவில் உள்வளாகத்தில் உள்ள பரிவார ஆலயங்களுக்கு கும்பாபிேஷகம் நடந்தது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், துணை சபாநாயகர் ராஜவேலு, சாய் சரவணன்குமார் எம்.எல்.ஏ., பா.ஜ., பிரமுர்கள் ஜெயக்குமார், சாய் தியாகராஜன், ஹரிஹர நமோநாராணன் உட்பட ஏராளமானோர் தரிசனம் யெ்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !