கடலுார் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்
கடலுார்; கடலுார் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடந்தது.
கடலுார் திருப்பாதிரிப்புலியூரில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான பிம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. அதையொட்டி வரதராஜ பெருமாள், தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். அப்போது பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க மங்கள வாத்தியத்துடன் கொடியேற்று விழா நடந்தது. பின்னர் சுவாமி மற்றும் கொடி மரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு அம்ச வாகனத்தில் வீதி உலாவும் , இன்று இரவு திருபல்லக்கிலும், நாளை இரவு சூரிய பிரபை வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், அறங்காவலர் குழு தலைவர் சாரங்கபாணி, அறங்காவலர்கள் ராதாகிருஷ்ணன், கிேஷார், கமலநாதன், கோவிந்தராஜலு மற்றும் ஆழ்வார் ஆகியோர் செய்து வருகின்றனர்.