ஆனித்திருமஞ்சனம்: பழநியில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :257 days ago
பழநி; பழநியில் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
பழநியில் ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆனி திருமஞ்சனம், பெரியநாயகி அம்மன் கோயிலில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இன்று அதிகாலை நடராஜர், சிவகாமி அம்மையாருக்கு பால்,பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின் தீபாராதனை நடந்தது. திருமஞ்சன நிகழ்ச்சிக்கு பிறகு நடராஜர், சிவகாமி அம்மன் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பாலசமுத்திரம்,பாலாறு பொருந்தலாறு அணை, அமுதீஸ்வரர் கோயிலில் ஆனித் திருமஞ்சன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.