திருப்பதி கோவிலுக்கு 3 கிலோ தங்கம் காணிக்கை!
ADDED :4690 days ago
ஐதராபாத்: பிரபல மதுபான அதிபர் விஜய் மல்லைய்யா, தன் பிறந்தநாளையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு, 3 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்தினார். இவரின், "கிங் பிஷர் விமான நிறுவனம், கடும் நிதி நெருக்கடியில் சிக்கியது. இதனால், "விமான போக்குவரத்து விதிமுறைகளை சரியாக பின்பற்றவில்லை என, கூறி, இந்த விமான நிறுவனத்தை, மத்திய அரசு, முடக்கி வைத்துள்ளது.இந்நிலையில், விஜய் மல்லைய்யா, தன், 57வது பிறந்த நாளையொட்டி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில், நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது, கோவில் கருவறைக்கு செல்லும் வாசல் கதவை அமைப்பதற்காக, 3 கிலோ தங்கத்தை, காணிக்கையாக செலுத்தினார்.