உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஷாட நவராத்திரி நிறைவு; கோவை கோவில்களில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

ஆஷாட நவராத்திரி நிறைவு; கோவை கோவில்களில் வாராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜை

கோவை; ஆஷாட நவராத்திரியின் நிறைவு நாளான நேற்று கோவை பகுதிகளில் உள்ள வாராஹி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. இதில் திருச்சி ரோடு ராமநாதபுரம் அம்பிகை ஸ்ரீ ஞானவாராகி கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் காட்சி அளித்தார். இதேபோன்று பொள்ளாச்சி ரோடு ரத்தினம் கலை அறிவியல் கல்லூரி அருகே அமைந்துள்ள ஆதி சிவன் வாராகி அம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு வளையல் அலங்காரத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !