அன்னூர் கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் சக்கரத்தாழ்வார் திருமஞ்சனம்
ADDED :125 days ago
கோவை; அன்னூர் ஸ்ரீதேவி -பூதேவி சமேத கரிவரத ராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ சக்கரத்தாழ்வார் திருமஞ்சன நிகழ்வு நடந்தது. இதன் முதல் நிகழ்வாக நேற்று மாலை 4 மணியளவில் விஸ்வக்சேனர் பூஜை நடந்தது. அதை தொடந்து சுதர்சன ஹோமம் நடைபெற்றது. நிறைவாக சக்கரத்தாழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7.45 மணியளவில் தீபாரதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலின் உட்பிரகாரத்தில் உற்சவர் சக்கரத்தாழ்வார் திருவீதியுலா வந்தார். பக்தர்களுக்கு தீர்த்தம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்கரத்தாழ்வரை தரிசனம் செய்தனர்.