வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :322 days ago
புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. வில்லியனுார் பெருந்தேவித் தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலில் 21ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி துவங்கி வரும் 14ம் தேதி வரை நடக்கிறது. இதில் தினமும் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சுவாமி வீதியுலா நடந்து வருகிறது. நேற்று கருட சேவை உற்சவம் நடந்தது. முன்னதாக காலை பெருமாளுக்கு சிறப்பு
அபிஷேகம் ஆராதனைகளும், மாலை கருட சேவை உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.