உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவம் துவக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. 


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தட்சணாயன புண்ணிய கால ஆனி பிரம்மோற்சவம் இன்று துவங்கியது. விழாவை முன்னிட்டு மேளதாளத்துடன் வேத மந்திரங்கள் முழங்க, சிறப்பு வழிபாடுகளுக்கு பின் சிவாச்சாரியார்கள் தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றினர். தங்கக்கொடி மரத்தின் முன், சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், பாரசக்தியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !