உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தண்டலம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

தண்டலம் காமாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

ஊத்துக்கோட்டை; தண்டலம் காமாட்சி அம்மன் சமேத தரணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவில், காஞ்சி சங்கராச்சாரியார்கள் பங்கேற்றனர்.


திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் கிராமத்தில் காமாட்சி அம்மன் சமேத தரணீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் புனரமைப்பு பணிகள் சமீபத்தில் நிறைவடைந்தன.இதையடுத்து, இம்மாதம் 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம், கோ பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தினமும் தனபூஜை, சாந்தி ஹோமம், அங்குரார்ப்பணம், ஆறு கால யாக பூஜைகள், விசேஷ சாந்தி, யாத்ரா தானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவின் முக்கிய நாளான நேற்று, 9:00 – 10:30 மணிக்கு, காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், இளைய மடாதிபதி ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், கோவில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 5:00 மணிக்கு சுவாமியின் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !