சஷ்டி விரதம்; சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம்..!
ADDED :96 days ago
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த இந்த சஷ்டி திதி. சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். இன்று வீட்டில் விளக்கேற்றி முருகனை வழிபடுவோம்.. அனைத்து நன்மையும் பெறுவோம்..!