சபரிமலையில் ஸ்ரீஐயப்பனை தரிசனம் செய்த ராஜநாகம்; பக்தர்கள் பரவசம்
சபரிமலை; புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் உத்தரவு இருந்தால் மட்டுமே ஐயனை காண முடியும். ஐயப்பன் உத்தரவின் பேரில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை சென்று ஐயனை கண்டு ஆனந்த கண்ணீர் விட்டு பக்தி பரவசம் அடைந்து வருகின்றனர். அந்த வரிசையில் பத்து அடி நீள ராஜநாகம் ஒன்று சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்ய இன்று அதிகாலை காட்டுக்குள் இருந்து சபரிபீடம் நோக்கி வந்தது. சபரிமலை 18 ம் படி அருகே தேங்காய் உடைக்கும் இடத்தில் அமைதியாக இருந்தபடி ஐயனை வேண்டி தலையை கீழே பதித்து சரணடைந்தது. சற்று நேரம் கழித்து புறப்பட்டது. ராஜ நாகத்தை வணங்கிய வனத்துறையினர் அதன் போக்கிலேயே விட்டு சபரிமலை பீடத்தை கடந்ததும், அதைப் பிடித்து அடர்ந்த வனத்தில் விட்டனர். ராஜ நாகம் ஐயப்பனை தரிசனம் செய்த காட்சியை கண்டு பக்தர்கள் மெய்சிலித்தனர். சாமி சரணம் ஐயப்பா என கோஷம் எழுப்பி விண்ணை அதிர வைத்தனர்.