ஆடி வெள்ளி; உடுமலை மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
ADDED :113 days ago
உடுமலை; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு உடுமலை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் அருள்பாலித்தார்.
ஆடி மாதம் அம்மனுக்கு பிடித்த மாதமாகும், இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் உடுமலை மாரியம்மன் அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரங்களில் அம்மன் எழுந்தருளினார். அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதிகாலை முதல் ஏராளமான பெண்கள் அம்மனை விளக்கேற்றி வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.