உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜை

நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் பத்மாவதி தாயாருக்கு தனி சன்னதி உள்ளது சிறப்பாகும். ஆடி மாதம் வெள்ளிக் கிழமையொட்டி இக்கோவிலில் கோமாதா பூஜையும், விஸ்வரூப தரிசனமும் நடந்தது. பத்மாவதி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனையும் நடந்தது. பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பூஜைகளை ரமேஷ் பட்டாச்சாரியார் செய்தார்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !