பரங்கிப்பேட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் வீதியுலா
ADDED :118 days ago
பரங்கிப்பேட்டை; பரங்கிப்பேட்டை அருகே மாரியம்மன் கோவிலில், ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு சுவாமி வீதியுலா நடந்தது. பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இரவு வீதியுலா நடந்தது. விழாவில், பாண்டியன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, கிராம நிர்வாகிகள் கனகராஜன், சுப்பிரமணியன், சரவணன், செந்தில், செல்வம் உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.