பொருவளூர் ஆதிமுத்து மாரியம்மனுக்கு பால் குட ஊர்வலம்
ADDED :173 days ago
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள பொருவளூர் எம்ஜிஆர் நகர் நரிக்குறவர் காலணியில் உள்ள ஆதி முத்து மாரியம்மனுக்கு பால் கூட ஊர்வலம் நடந்தது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் நரிக்குறவர் காலனியில் உள்ள ஆதி முத்து மாரியம்மனுக்கு ஆடி மாதம் முதல் செவ்வாய் அன்று சாகை வார்த்தல் திருவிழா நடப்பது வழக்கம்.அதனைத் தொடர்ந்து அதனை தொடர்ந்து நேற்று ஆதி முத்து மாரியம்மனுக்கு 108 பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி பொரசப்பட்டு சாலையில் திரளான பக்தர்கள் ஊர்வலமாக கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.இதனை தொடர்ந்து அம்மனுக்கு அலங்கார பூஜையும் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றன.செவ்வாய்க்கிழமை மாலை தீமிதி நிகழ்ச்சியும் நடைபெறும்.