திருவாடானை முத்துமாரியம்மன் கோயிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED :148 days ago
திருவாடானை; திருவாடானை தென்கிழக்கு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஜூலை 15 ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று காலை பால்குடம் ஊர்வலம், பூக்குழி இறங்குதல் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வெள்ளி கவசத்தால் அம்மன் அலங்கரிக்கபட்டு வாண வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. அன்னதானம், இரவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.