உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓம் சக்தி மாரியம்மன் கோவில் 43 ஆம் ஆண்டு தேர் திருவிழா

ஓம் சக்தி மாரியம்மன் கோவில் 43 ஆம் ஆண்டு தேர் திருவிழா

சிதம்பரம்; சிதம்பரம் ஆனந்தீஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவில் 43 ஆம் ஆண்டு தேர் திருவிழா இன்று நடந்தது. சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவில் தெருவில் அமைந்துள்ள ஓம் சக்தி மாரியம்மன் கோவில் 43 ம் ஆண்டு ஆடிதிருவிழா கடந்த 16 ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து தினசரி உற்சவங்கள் நடந்து வந்தது. முக்கிய விழாவான தேர் திருவிழா இன்று நடந்தது. காலை ஆனந்தீஸ்வரன் கோவில் தெருவில் இருந்து புறப்பட்ட தேர். பல்வேறு வீதிகளின் வழியாக சென்று , மீண்டும் மதியம் கோவிலுக்கு வந்தடைந்தது. அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடந்தது. நாளை அம்மன் வீதி உலாவுடன், காத்தவராயன் கழுகு மரம் ஏறும் நிகழ்வு நடைபெறுகிறது. நாளை (25ம் தேதி) பூங்கரகம், செடல் காவடி நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !