உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆடி அமாவாசை; ராமேஸ்வரம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு

ஆடி அமாவாசை; ராமேஸ்வரம், சேதுக்கரையில் குவிந்த பக்தர்கள்.. புனித நீராடி வழிபாடு

ராமேஸ்வரம்: இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.


ஆடி அமாவாசை யொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், அக்னி தீர்த்தக்கடலில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், புனித நீராடினர். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து ராமர், தங்க கருட வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கடற்கரையில் எழுந்தருளினார். வேத விற்பன்னர்கள் மந்திரம் முழங்க, பக்தருக்கு தீர்த்தம் வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் பக்தர்கள், அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடினர், கோயிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராட, கோயில் நான்கு ரதவீதிகளை சுற்றி, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். 


ஆடி அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை பக்தர்கள் சேதுக்கரை கடலில் புனித நீராடி அங்குள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வழிபட்டனர். ஆடி அமாவாசையில் புண்ணிய தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை இந்துக்கள் புண்ணியமாக கருதுகின்றனர். திருப்புல்லாணி அருகே சேதுக்கரை கடலில் புனித நீராடுவதற்கு இன்று அதிகாலை முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர்.வழக்கத்தை விட இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !