கடலுார் சில்வர் பீச்சில் ஆடி அமாவாசை தர்ப்பணம்
ADDED :172 days ago
கடலுார்; கடலுார் சில்வர் பீச்சில் ஆடி அமாவாசையையொட்டி ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். ஆடி அமாவாசையையொட்டி மறைந்த முன்னோர்களுக்கு கடலுார் தேவனாம்பட்டிணம் கடற்கரையில் நேற்று காலை ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து, கடலில் குளித்து, புரோகிதர்கள் மூலம் முன்னோர்களுக்கு எள், தண்ணீர், வாழைக்காய் வைத்து தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். அதேப் போன்று கடலுார் பெண்ணை ஆறு, கெடிலம் ஆறுகளிலும் பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர்.