திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமிக்கு ரூ.2.4 கோடி தங்க சங்கு, சக்கரம் நன்கொடை
ADDED :70 days ago
திருப்பதி ; சென்னையை சேர்ந்த சுதர்சன் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தை சேர்ந்தவங்க, 2.4 கோடி ரூபாய் மதிப்புள்ள 2.5 கிலோ எடையில தங்கத்தால் செய்த சங்கு, சக்கரத்தை நன்கொடையாக அளித்தனர். கோவில் வந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் ஏழுமலையானை மனமுருகி வேண்டினர். தொடர்ந்து கோயில் ரங்கநாதர் மண்டபத்தில கூடுதல் இஓ. வெங்கையா சௌத்ரியிடம் தங்க சங்கு சக்கரத்தை காணிக்கை ஒப்படைத்தனர். கோயில் சார்பில அவர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கி வாழ்த்தினர்.