விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED :242 days ago
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் ஆடிப்பூர திருவிழா கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை அபி ேஷகம், இரவு சுவாமி வீதியுலா நடந்தது. 27ம் தேதி தேர் திருவிழா, நேற்று முன்தினம் தீர்த்தவாரி உற்சவம், ஸ்படிக பல்லக்கில் சுவாமி ஊர்வலம் நடந்தது. நேற்று விருத்தாம்பிகை, விருத்தகிரீஸ்வரர் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.