ஆடி வெள்ளி அம்மனுக்கு வெற்றிலை அலங்காரம்: பக்தர்கள் பரவசம்
ADDED :119 days ago
கூடலூர்; மேல்கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு வெற்றிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மேல்கடலூர் சந்தக் கடைமாரியம்மன் கோவிலில், ஆடி வெள்ளியை முன்னிட்டு ஒவ்வொரு வாரமும் அம்மனை சிறப்பு அலங்காரத்தில் முக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். மூன்றாவது வாரமான, இன்று ஆடி வெள்ளி முன்னிட்டு, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. அம்மன், வெற்றிலை இலைகளில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். சிறப்பு பூஜைகள் நடந்தது. குழந்தைகள், பெண்கள் பெருமளவில் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர். பத்தர்களுக்கு, பிரசாதமாக புளியோதரை, கேழ்வரகு கூழ் வழங்கப்பட்டது.