புவனகிரி சாமுண்டீஸ்வரி கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
ADDED :119 days ago
புவனகிரி; புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை நடந்தது. புவனகிரி சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை மற்றும் ஆடி மாத 3ம் வெள்ளி விழா கடந்த 30ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கலச அபிஷேகம், கோ பூஜை, பால்குட அபிஷேகம் நடந்தது. நேற்று சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலசந்தி பூஜை, லட்சார்ச்சனை நடந்தது. இன்று லட்சார்ச்சனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை தேவாங்கர் சமுதாயத்தினர் செய்திருந்தனர்.