வடவள்ளியில் ஆவணி அவிட்டம் பூணூல் மாற்றும் விழா
ADDED :187 days ago
வடவள்ளி; வடவள்ளியில், தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தை ஒட்டி, பூணூல் மாற்றும் விழா நடந்தது. தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ஆவணி அவிட்டத்தையொட்டி, பூணூல் மாற்றும் விழா, வடவள்ளி தாம்ப்ராஸ் ஹாலில் இன்று நடந்தது. இதில், ரிக் உபகர்மா, யஜூர் உபாகர்மா எனும் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதில், புரோகிதர்கள் கணபதி வாத்தியார், ராம்குமார் வாத்தியார் ஆகியோர், பூணூல் மாற்றுவதற்கான யாகங்களை நடத்தினர். உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி உள்ளிட்டவைகளுக்காக பிரார்த்தனை செய்து பூணூல் மாற்றப்பட்டது. இதில், 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.