உளுந்துார்பேட்டை ஆதிகேசவபெருமாள் கோவிலில் வரலட்சுமி நோன்பு
ADDED :111 days ago
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை கனகவல்லி தாயார் சமேத ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வரலட்சுமி விரத நோன்பு பூஜை நடந்தது. வரலட்சுமி விரத நோன்பு முன்னிட்டு, நேற்று இரவு 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. முன்னதாக பெண்கள் மாங்கல்ய பூஜை, கலச பூஜை செய்து, நோன்பு கயிறு கட்டி கொண்டனர். பின்பு சுவாமி மற்றும் கலசத்திற்கு தீபாராதனை நடந்தது. விழாவில் கயல்விழி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் சிவராஜ், ஆண்டாள் சேவை குழு, கோ மாதா பூஜை குழு, பௌர்ணமி பூஜை குழு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.