ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் லட்சுமிநரசிம்ம பெருமாள் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்
ADDED :59 days ago
திருச்சி: காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் ஜேஷ்டாபிஷேகம், சிறப்பு சேவை நடைபெற்றது.
நரசிம்ம ஸ்தலங்கள் காட்டழகிய சிங்கபெருமாள், ஆற்றழகிய சிங்கப்பெருமாள், மேட்டழகிய சிங்கப் பெருமாள் ஆக மூன்று ஸ்தலங்களில் மிகவும் விசேஷமாக போற்றக்கூடிய ஸ்தலம் ஆகும். அதிலும் லோகமாதாவும் ஜகன் மாதாவுமான மஹாலட்சுமி தாயார் அஞ்சலி ஹஸ்தத்துடன் சேவை சாதிப்பதால் இந்ந ஸ்தலமானது பிரார்த்தனை ஸ்தலமாக கருதப்படுகிறது. இத்தகைய சிறப்பு மிக்க ஆற்றழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் பெரிய திருமஞ்சனம் எனப்படும் ஜேஷ்டாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்துதி ருப்பாவடை சாற்றுமுறை சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.