உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூர்; திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணி திருவிழா 10ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடந்தது.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உப கோவிலான வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். 10ம் திருநாளான இன்று காலை 6 மணிக்கு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக தேரில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடம் பிடிக்க தேரோட்டம் சிறப்பாக நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார், கோவில் ஊழியர்கள் செய்திருந்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !