வியாசராஜர் மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரரின் 354 வது ஆராதனை உற்சவம்
ADDED :171 days ago
கோவை; ஸ்ரீ ராகவேந்திரரின் 354 வது ஆராதனை உற்சவம் கோவை ரங்கே கவுண்டர் வீதியில் உள்ள கர்நாடக மாநிலம் மைசூர் அருகில் அமைந்துள்ள விசாச ராஜர் மடத்தின் கோவை மடம் சார்பில் நடைபெற்றது. விழாவில் மூலவர் கோபாலகிருஷ்ணன், ஆஞ்சநேயர், ,வியாசராஜர்,ஸ்ரீ ராகவேந்திரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை ,அபிஷேகம் நடந்தது. இதில் புஷ்ப அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.