முத்துமாரியம்மன் கோயிலில் 1008 சங்காபிஷேகம்
ADDED :169 days ago
தேவகோட்டை; தேவகோட்டை காசுக்கடைவீதி முத்துமாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை யொட்டி நேற்று அம்மனுக்கு துர்கா ஹோமமும் அதனைத் தொடர்ந்து அபிஷேகம், உலக அமைதி மற்றும் உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடந்தன. அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இன்று பால்குடம் எடுத்தல், மதியம் பொங்கல் வைத்தல் நடைபெற உள்ளன.