வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம்
ADDED :105 days ago
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் நடந்தது. எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபைக்கு பாத்தியமான வரதராஜ பெருமாள் கோயிலில் அலர்மேலு மங்கை, பத்மாவதி தாயாருடன் ஸ்ரீநிவாச பெருமாள் தனிச்சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு 32 வது ஆண்டு கலச அபிஷேக விழா காலை 7:00 மணிக்கு அனுக்ஞையுடன் துவங்கியது. தொடர்ந்து கலச ஸ்தாபனம், யாகம், மகா பூர்ணாகுதி நடந்தது. 11:00 மணிக்கு பெருமாளுக்கு 108 கலச அபிஷேகம் நிறை வடைந்தது. மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மாலை பெருமாள் மலர் அலங் காரத்தில் அருள் பாலித்தார். உற்ஸவர் ஸ்ரீநிவாச பெருமாள் சேஷ வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏராளமானபக்தர்கள் தரிசனம் செய்தனர்.