உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தியன்று பாதக்கோலம் போடுவது ஏன்?

கிருஷ்ண ஜெயந்தியன்று பாதக்கோலம் போடுவது ஏன்?

கிருஷ்ண ஜெயந்தியன்று தென்னிந்தியாவில் கண்ணனை வாசலில் இருந்து வரவேற்கும் விதமாக கோலமிடுவது வழக்கம். குழந்தை கிருஷ்ணரின் பாதங்களை வரிசையாக அரிசி மாவினால் வரைவர். இதன் மூலம் கிருஷ்ணர் நேரில் இல்லத்துக்கு எழுந்து அருள்வதாக ஐதீகம். அவருக்கு பிடித்தமான அவல், வெண்ணெய்,சீடை, நாவல் பழங்களைப் படைத்து வழிபடுவர். கிருஷ்ணர் வருகையால் ஆயர்பாடியில் செல்வம் பெருகியது போல, ஆண்டு முழுவதும் வீட்டில் செல்வவளம் இருக்க வேண்டும் என்பதற்காக கிருஷ்ணரின் பாதக்கோலத்தை இடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !