விருச்சிகராசிக்கு தற்போது ஏழரைச்சனி நடப்பதால் என்ன பரிகாரம் செய்வது நல்லது?
ADDED :4718 days ago
விருச்சிகம் மட்டுமில்லாமல் துலாம், கன்னி ராசியினர்க்கும் ஏழரைச்சனி நடக்கிறது. இதில் விருச்சிகத்திற்கு பன்னிரண்டாம் இடமான விரயச்சனி காலம். சனிக்கிழமையில் சனீஸ்வரருக்கு எள்தீபம் இடுவது சிறந்த பரிகாரம். சனிபிரதோஷத்தன்று சிவாலய தரிசனம் செய்வதும் விரயச்செலவுகளை குறைக்க துணை நிற்கும்.