உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் 27 முறை வலம் வந்து பக்தர்கள் வழிபாடு

ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் 27 முறை வலம் வந்து பக்தர்கள் வழிபாடு

திருச்சி; ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோயிலில் நேற்று ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


ஒவ்வொரு மாத பிறப்பிலும் பக்தர்கள் காட்டழகிய சிங்கர், லக்ஷ்மிநரசிம்மர் சந்நிதியை 27 முறை வலம் வந்து வழிபட்டால் நினைத்தது நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நேற்று ஆவணி மாத பிறப்பை முன்னிட்டு 27 பூக்களை கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு முறை சுற்றி வந்து ஒரு மலரினை கம்பத்தடியில் சேர்த்து, தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். நேற்று விடுமுறை தினத்தில் மாத பிறப்பு வந்துள்ளதால்

ஆந்திர , கர்நாடகா மாநில பக்தர்கள் அதிக அளவில் வந்திருந்து தரிசனம் செய்தனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !