உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு

கோவை; கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆவணி ஏகாதசி திதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


இன்று அஜா ஏகாதசி . இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது. அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஏகாதசியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் மூலவர் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராய் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !