தாழை மதலை கருப்பணசாமி கோயிலில் மண்டல பூஜை விழா
ADDED :100 days ago
பரமக்குடி; பரமக்குடி காட்டுப்பரமக்குடி கிராமத்தில் அருள்பாலிக்கும் தாழை மதலை கருப்பணசாமி கோயில் மண்டல பூஜை விழா நடந்தது. கோயிலில் ஜூலை 2 மகா கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை விழாவையொட்டி, கருப்பணசாமி, சோனை கருப்பண், ஸ்ரீ ராக்காச்சி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதனையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிரசாதங்கள், அன்னதானம் வழங்கப்பட்டது. தலைவர் கருப்பையா, பொருளாளர் பூசத்துரை, செயலாளர் கோபிகிருஷ்ணன் உட்பட கோயில் குடிமக்கள், கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்தனர்.