உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுர்த்தி விழா; கேடகம் வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் உலா

சதுர்த்தி விழா; கேடகம் வாகனத்தில் உப்பூர் வெயிலுகந்த விநாயகர் உலா

ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் இரண்டாம் நாள் ஊர்வலமாக கேடகம் வாகனத்தில், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.


ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூரில் விநாயகர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மூலவர் மீது பகல் முழுவதும் சூரிய ஒளி படும் வகையில் கருவறை அமைய பெற்றுள்ளதால், வெயிலுகந்த விநாயகர் என அழைக்கப்படுகிறார். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விநாயகருக்கு ஆண்டுதோறும் பத்து நாட்கள் சதுர்த்தி விழா நடக்கிறது. இந்த நிலையில், சதுர்த்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வாக, கேடகம் வாகனத்தில் விநாயகர் வீதி ஊர்வலம் நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற விநாயகர் ஊர்வலத்தை வரவேற்கும் விதமாக பெண்கள் தெருக்களில் மாக்கோலமிட்டு வரவேற்று, தீப ஆராதனை செய்து வழிபாடு செய்தனர். முன்னதாக, மூலவருக்கு கிராமத்தார்கள் சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபாடு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !