உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடகால் செல்வவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

வடகால் செல்வவிநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்

செஞ்சி; வடகால் செல்வ விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.


செஞ்சி அடுத்த வடகால் செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணிகள் செய்து, மகா மண்டபம், நவகிரக சிலைகள் பிரதிஷ்டை செய்து மகா கும்பாபிஷேக இன்று நடந்தது. இதை முன்னிட்டு 19ம் தேதி காலை 8:30 மணிக்கு அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமமும், மாலை 5 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்ப அலங்காரம், முதல் காலையாக சாலை பூஜையும், இரவு சாமி அஷ்டபந்தனம் சாற்றுதல், கண் திறத்தல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, தத்துவர்த்தனை, நாடி சந்தானம், இரண்டாம் கால யாக சாலை பூஜையும், 9.30 மணிக்கு மகா பூர்ணாஹுதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 10 மணிக்கு மகா கும்பாபிஷேகமும், 10.30 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஒன்றிய சேர்மன் விஜயகுமார், அ.தி.மு.க., மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்விராஜ், மாவட்ட கவுன்சிலர் அகிலா பார்த்தீபன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் விஜயராகவன் மற்றும் விழா குழுவினர், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !