உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தஞ்சை பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்கள் பங்கேற்பு

தஞ்சை பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்கள் பங்கேற்பு

தஞ்சை; சாலியமங்கலம் அருகே உள்ள சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் கல்நது கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


தஞ்சாவூர் மாவட்டம், சாலியமங்கலம் அருகே,  நெல்லித்தோப்பு கோவிலூர் பகுதியில்,   அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ பிரம்ம ஞானபுரீஸ்வரர் ஆலயம் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பல லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று,  கும்பாபிஷேகம் இன்று  நடைபெற்றது, கணபதி ஹோமம், மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்பட பூர்வாங்க பூஜைகள் உள்பட  யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து மேள, தாளங்களுடன் வேத மந்திரங்கள் முழங்க,  ஆலயத்தின் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா  கும்பாபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டஐ. கும்பாபிஷேகத்தில் ஏராளமான கிராம மக்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !