உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி பள்ளிகொன்டேஸ்வர சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

காளஹஸ்தி பள்ளிகொன்டேஸ்வர சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜை

காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி அடுத்துள்ள நாகலாபுரம் மண்டலத்தில் உள்ள சுருட்டு பள்ளியில் வீற்றிருக்கும் சர்வ மங்களா சமேத பள்ளிகொன்டேஸ்வர சுவாமி கோயிலில் பிரதோஷ பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது.  கோயிலில் பிரதோஷத்தை யொட்டி, கோயில் வளாகத்தில் நந்தீஸ்வர சுவாமி மற்றும் வால்மீகேஸ்வர சுவாமிக்கு ஒரே நேரத்தில் பிரதோஷ பூஜைகள் செய்யப்பட்டன. பால், பன்னீர், மஞ்சள், சந்தனம், குங்குமம், இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற பல்வேறு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, சுவாமி அம்மையார்கள் மற்றும் பிரதோஷ நந்தீஸ்வர சுவாமிக்கு பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  தீப தூபம் சமர்ப்பிக்கப்பட்டு, மகா தீபாராதனை செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி பி.லதா  மற்றும் கோயில் அர்ச்சகர்கள், ஊழியர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !