/
கோயில்கள் செய்திகள் / உலக நன்மை வேண்டி சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் ருத்ர பாராயணம்
உலக நன்மை வேண்டி சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் ருத்ர பாராயணம்
ADDED :67 days ago
ராமேஸ்வரம்; உலகில் அமைதி, செழிப்பு நிலவ வேண்டி, சத்ய சாயி நிறுவனங்கள் சார்பில் ராமேஸ்வரத்தில் ஏகாதச ருத்ர பாராயண நிகழ்ச்சி நடந்தது.
பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் ஜோதிர்லிங்க தலங்களில் ருத்ர பாராயண நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று ராமேஸ்வரத்தில் சத்ய சாய் சேவா நிறுவனங்கள் சார்பில் வேத விற்பனர்கள் 1600 பேர் பங்கேற்ற ஏகாதச ருத்ர பாராயணம் நடந்தது. ராமேஸ்வரம் கோசுவாமி மடத்தில் உலக நன்மைக்காக ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மகா ருத்ர ஜெபம் பூஜை செய்தனர். இந்த ஜெபம் தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்றது.