உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆவணி இரண்டாம் சோம வாரம்; ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம்

ஆவணி இரண்டாம் சோம வாரம்; ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு அபிஷேகம்

கோவை; ராம் நகர் கோதண்ட ராமர் சுவாமி கோவிலில் ஆவணி இரண்டாவது சோம வாரர  திங்கட்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள ஆபத்சகாய வில்வ லிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. இதில் சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !