101 கணபதி
ADDED :145 days ago
மைசூரு நகரின், கணபதி கோவில் சாலையில், அகராவில் 101 விநாயகர் கோவில் அமைந்துள்ளது. மைசூரில் பழமையான கோவில்களில், இதுவும் ஒன்றாகும். நூற்றுக்கணக்கான ஆண்டு பழமையான கோவிலாகும். கோவிலுக்குள் சிறிதும், பெரிதுமாக 101 விநாயகர் சிலைகள் இருப்பதால், 101 விநாயகர் கோவில் என்ற பெயர் ஏற்பட்டது.
கண் கவர் கலை வடிவத்துடன் தென்படுகிறது. மைசூரு மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இருந்து, தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். விநாயகர் சதுர்த்தி நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
தரிசன நேரம்: காலை 6.00 மணி முதல், இரவு 9.00 மணி வரை.