நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதியுலா
ADDED :69 days ago
நாகப்பட்டினம்; நாகையில் 32 அடி உயர விஸ்வரூப அத்தி விநாயகர் வீதியுலா நடந்தது.
நாகையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நேற்று நீலாயதாட்சி அம்மன் கோவில் முகப்பில் இருந்து விநாயகர் ஊர்வலம் புறப்பட்டது. 32 அடி உயரத்தில் அத்திமரத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை வீதியுலா நடந்தது. மயிலாட்டம், புலியாட்டம் , ஒயிலாட்டம், சிலம்பம், கேரளா ஜென்டை மேளம், கதகளி, கரகாட்டம் உட்பட 30க்கும் மேற்பட்ட வாத்தியங்கள் முழங்க, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஏராளமான வாகனங்கள் வீதியுலாவில் அணிவகுத்தன. நாகையின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த விநாயகர் ஊர்வலம், நேற்று காலை நாகூர் வெட்டாற்று பகுதியை வந்தடைந்தது. பின்னர் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலை, பைபர் படகு மூலம் எடுத்துச் செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது.