உத்தரகோசமங்கையில் வளர்பிறை பஞ்சமி
ADDED :201 days ago
உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பித்ருக்களின் சாப விமோசனம் பெறவும் பில்லி சூனியத்தின் பாதிப்புகளில் இருந்து நிவாரணம் பெறவும் ஏராளமானோர் இக்கோயிலுக்கு வரு கின்றனர்.
முன்னதாக மூலவர் வராகி அம்மனுக்கு 16 வகை அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
கோயில் வளாகத்தில் உள்ள நுாறுக்கும் மேற்பட்ட அம்மி கல்லில் பெண்கள் பச்சை விரலி மஞ்சள் அரைத்து உருண்டையாக பிடித்து அரைத்துக் கொண்டு வந்தனர்.
தேங்காய், எலுமிச்சம் பழம் உள்ளிட்டவை களால் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பிரசாதம் வழங்கப்பட்டது.