முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :66 days ago
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை உற்சவம் நேற்று நடந்தது.
புதுச்சேரி முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகரில் உள்ள லட்சுமி ஹயக்ரீவர் கோவில் 54ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 27ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று மாலை கருட சேவை உற்சவம் நடந்தது. மு
ன்னதாக காலை பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகளும், தொடர்ந்து திருமஞ்சனம் நடந்தது. மாலை கருட சேவை உற்சவம் நடந்தது. விழாவில் முன்னாள் நீதிபதி ராமபத்திரன் மற்றும் திராள பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.