கிணத்துக்கடவு பத்ரகாளியம்மன் கோவிலில் திருக்கல்யாண வைபவம்
ADDED :114 days ago
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில், சுவாமிக்கு இன்று (3ம் தேதி) திருக்கல்யாணம் நடந்தது. கிணத்துக்கடவு, தேவராடிபாளையம் பத்ரகாளியம்மன் கோவிலில், மூன்றாம் ஆண்டு பூச் சாட்டு விழா, கடந்த மாதம் ஆகஸ்டு 26ம் தேதி, கொடி கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. செப்., 2ம் தேதி, இரவு, கரகம் மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்வு நடந்தது. 3ம் தேதி, அதிகாலையில், அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இதில், பக்தர்கள் பலர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விநாயகர் கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்தல் மற்றும் பொங்கல் வைத்து கிடா வெட்டும் நிகழ்வு நடந்தது. 5ம் தேதி, காலை 8:00 மணிக்கு, மஞ்சள் நீராடுதல் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடக்கிறது.